×

சிந்தலவாடி மகா மாரியம்மனுக்கு 2 டன் எடை காய்கறி அலங்காரம்

கிருஷ்ணராயபுரம், ஏப்.16: கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி மகாமாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு 2 டன் எடையுள்ள பழங்கள் மற்றும் காய்கறி கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சித்திரை 1ம் தேதி சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி மகாமாரியம்மன் கோயிலில்காலையில் கணபதி யாகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவியங்கள் என சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மாலை நேரத்தில் 2000 கிலோ அளவில் காய்கறிகள், பழங்கள் என கேரட், பீட்ரூட், உருளை, பச்சை மிளகாய், வாழைக்காய், நெல்லிக்காய், வெண்டைக்காய், செவ்வாழை, மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட 20க்கும் மேலான பல்வேறு வகையான காய்கறி, பழங்களால் சுமார் 2 டன் எடையுள்ள பழங்கள், காய்கறிகளில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி, பழ வகை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சிந்தலவாடி மகா மாரியம்மனுக்கு 2 டன் எடை காய்கறி அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Chinthalavadi ,Maha Mariamman ,Krishnarayapuram ,Chinthalavadi Mahamariamman temple ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்